Petrol bottle distribution in Parimuna temple

சென்னை பாரிமுனையில் கோயிலுக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சென்னை பாரிமுனையில் வீரபத்திரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அருகே பல்வேறு கடைகள் உள்ளன. இந்நிலையில் அந்தப் பகுதிக்கு மதுபோதையில் வந்த முரளி என்ற நபர் திடீரென கோயிலை நோக்கி பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட முரளியும் அதே பகுதியில் கடை வைத்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அந்தக் கோவிலின் பூசாரி தெரிவிக்கையில், ''காலையில் 8:50 மணி இருக்கும். நாங்க வாசலில்தான் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். நேரா வந்தாரு திடீரென பாட்டில் எடுத்து வீசிட்டாரு. தக தகவென எரிந்தது. நாங்க தண்ணி போட்டு அணைத்து விட்டோம். நான் வேண்டியதைகொடுக்கலன்னு வீசி அடிச்சாரு'' என்றார்.