
தஞ்சாவூரில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாணவரணி மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் ஸ்ரீகாந்த் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால் வீட்டுக் கதவில் மாட்டப்பட்டிருந்த திரைச்சீலை எரிந்து சாம்பலானது. வீடு பூட்டப்பட்டிருந்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
உடனடியாக காங்கிரஸ் நிர்வாகி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் இது குறித்த விசாரணையை தொடங்கி உள்ளனர். மாநில மாணவரணி நிர்வாகி வீட்டில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)