
வேலூரில்இருசக்கர வாகனத்தில் சென்றபோதுசேறு அடித்ததால் ஏற்பட்ட தகராறில்,வாகனத்தை தீ வைத்து எரித்ததோடுவீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலீம். இவர்இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம் சென்ற வேகத்தில் அப்ரோஸ் என்பவர் மீது சாலையிலிருந்த சேறுதெறித்துவிட்டது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் தீராத அப்ரோஸ் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கலீம் வீடு என நினைத்து நைமுதின் என்ற மற்றொரு நபரின் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசினர். அதேபோல், கலீமின்வாகனம் என கருதி நைமுதினின்இருசக்கர வாகனத்தைத் தீயிட்டனர். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)