உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் உயர்கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இந்த கார்களுக்கான பெட்ரோல் செலவை இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்றிருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர், பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிர்வாக செலவுகளையும் ஊழல்களையும் ஆய்வு செய்து வருகிறார். அனைத்து பல்கலைக்கழகத்திலும்மறைமுகமாக செலவிடப்படும் செலவு கணக்குகள் பல கோடி ரூபாய்களை தாண்டுவதாக சமீபத்தில் ராஜ்பவனின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 கார்கள் அமைச்சர் அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதும், அதற்கான எரிபொருள் செலவினத்தை பல்கலைக்கழக நிர்வாகமே கொடுத்து வருவதும் கண்டறியப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளது ராஜ்பவன்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சருக்கான கார் பெட்ரோல் செலவை பல்கலைக்கழகம் ஏற்கத் தேவையில்லை என உத்தரவிட்டதன் பேரில்,அமைச்சரின் கார் பெட்ரோல் பில்லுக்கு பணம் தரமுடியாது என அண்ணா பல்கலைக்கழகம் மறுத்திருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
"தற்போது பெட்ரோல் செலவினத்தை மட்டும் தர மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சருக்கும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் கார்களையும் கட் பண்ணுவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. காரணம், அமைச்சருக்கும் துறையின் செயலாளருக்கும் அரசு தரப்பில் கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் சார்பில் எதற்கு கார்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான்" என்கிறது பல்கலைக்கழக வட்டாரம்.
இந்த விவகாரம், உயர்கல்வித் துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.