சேலம் - சென்னை8 வழிச்சாலைதிட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும்கூட்டத்திற்காகமத்திய சாலைமற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்துள்ளார்.
இன்று (16.02.2021) மதியம் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில்பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையில்பேசுகையில், ''கழிவுநீரைக்கூடபணமாக்கும்முயற்சியில்ஈடுபடவேண்டும். நாக்பூரில் கழிவுநீரை மின் உற்பத்திக்காக மஹாராஷ்டிரா அரசுக்குவிற்பனை செய்கிறோம். தோல் பொருட்களைஉற்பத்தி செய்யும் ஆலைகளால்மாசு ஏற்படுத்துகிறது''என்றார். அதன்பின் வேலூர்வாலாஜாபாத் அருகே உள்ள வி.சி.மோட்டூரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை காணொலிக்காட்சிவாயிலாகதொடங்கி வைத்தார்.
பின்புசெய்தியாளர்களைச் சந்திக்கையில், ''சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு சாலை உருவாக்கப்படும். அதற்கான அடிக்கல்நாட்டு விழாவில்பிரதமரும், தமிழக முதல்வரும் பங்குகொள்வார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. விவாயிகள் ட்ராக்டருக்கு இயற்கை எரிவாயுவைப்பயன்படுத்தினால்பெட்ரோல்,டீசல்விலையைக் குறைக்கலாம். ஃபாஸ்டேக் வாங்க கொடுக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது.இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது'' எனதிட்டவட்டமாக தெரிவித்தார்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலைதொடர்பாக, இன்று மாலை சென்னைலீலா பேலஸ் ஹோட்டலில்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தவுள்ளார் என்ற தகவலும்வெளியாகியுள்ளது.