Petrol and diesel hike... madurai congress strggule

Advertisment

மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில்,இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்,மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் உயர்வை எதிர்த்துகாங்கிரஸ் சார்பில் அந்தந்த மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அதன்படி, மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.