Advertisment

கல்லூரிகளுக்கான இறுதி பருவத் தேர்வை ரத்து செய்ய கோரிய மனு! பதிலளிக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு!

Petition seeking cancellation of final exams for colleges! Central and state governments ordered to respond!

பொறியியல், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புகளின் இறுதி பருவத் தேர்வையும்ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகள் மற்றும்அனைத்து பட்டப் படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், பள்ளி, கல்லூரிகள் கரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போதைய சூழலில், கரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம்தான் தணியும்,பள்ளி, கல்லூரிகள் 2021-ம் ஆண்டு ஜனவரியில்தான் திறக்க முடியும்எனக் கூறப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால், அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகிவிடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும்,இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும், தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதி பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். இறுதி பருவத் தேர்வு நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கும்,பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.

exam College students highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe