/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/seeman-arr-art_1.jpg)
பிரபாகரன் படத்தைச் சீமான் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனு ஒன்றை இன்று (15.02.2025) தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்தி வருகிறார். ஏ.கே. துப்பாக்கியுடன் இருப்பது போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களைச் சீமான் பயன்படுத்துகிறார். எனவே பிரபாகரன் படத்தைச் சீமான் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, பிரபாகரனைச் சந்தித்ததாகவும், இருவருக்கும் இருந்த தொடர்பு குறித்து அவ்வப்போது சீமான் பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருகிறார். அதே சமயம் சீமான் பிரபாகரனைச் சந்திக்கவில்லை என்றும், அவர் சொல்வது பொய் என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதோடு சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் புகைப்படமும் எடிட்டிங் செய்யப்பட்டது என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)