/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20200519-WA0062.jpg)
கடலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் முத்து தலைமையில் அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமஜனை சந்தித்து மனு அளித்தனர். அதில்,
சிதம்பரம், புவனகிரி பகுதியில் ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகிறது.இதில் ஆயிரத்து 1200 ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர். இவர்களில் 50 பேர் மட்டுமே நலவாரியத்தில் பதிவு பெற்றுள்ளனர். மீதி உள்ள அனைவரும் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. இந்தநிலையில் தற்போது ஊரடங்கு தடை காலத்தில் இவர்கள்குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் இவர்களுக்கு யாரும் நிவாரணம் உள்ளிட்ட எந்த உதவியும் செய்யவில்லை. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி கிடைக்க ஆவணம்செய்ய வேண்டும் என்றும், சமூக இடைவெளியுடன் சனிடைசர் உள்ளிட்ட கிருமி நாசினி பாதுகாப்புடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற சார் ஆட்சியர் இதனை அரசின் கவனத்திற்கு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)