ADVERTISEMENT

சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கக்கோரிய மனு தள்ளுபடி

10:05 PM Oct 31, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரராவார். அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் வீரமாதேவி என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்தப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில், ஆபாசபட நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார். எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், அதுவரை படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில் மனுதாரர் மனுவினை வாபஸ் பெற்றார். இதையடுத்து மனுவை பொதுநல வழக்காக ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரர். கணவரின் இறப்புக்கு பிறகு வீரமாதேவி, சதி எனும் உடன்கட்டை ஏறினார். அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் வீரமாதேவி என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.


இந்தப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் பிரபல ஆபாசபட நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார். சன்னிலியோனின் ஆபாச படம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இப்போதும் இணையதளத்தில் அவரது ஆபாசன படங்கள் உள்ளன. ஆபாச படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆபாச பட நடிகை விருது சில ஆண்டுக்கு முன்பு சன்னிலியோனுக்கு வழங்கப்பட்டது.


இவர் வீரமாதேவியாக நடிப்பது வீரமாதேவியை அவமானம் செய்வதாகும். முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், அவரது மனைவி வீரமாதேவிக்கும் தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.


வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிப்பதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படுகிறது. அங்கு பலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் சன்னிலியோன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், அதுவரை படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பொதுநல வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள், இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறினார். பின்னர் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT