மே 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிடும் போது சில தளர்வுகளையும் அறிவித்தது. அவற்றில், கோவில்களை திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் தமிழக அரசு தற்போது வரை கோவில்கள் திறப்பது பற்றி அறிவிக்கவில்லை.

Advertisment

அதனால், நேற்று (03.06.2020) மாலை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசு கோவில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் வேடம் அணிந்திருந்த சிறுவனுடன் வந்து முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

Advertisment