Advertisment

7 பேர் விடுதலை தொடர்பாக கே.என்.நேருவிடம் மனு!

Petition to KN Nehru regarding release of 7 persons!

Advertisment

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இதில் பேரறிவாளன் மட்டும் அவ்வப்போது பரோலில் வந்து செல்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் தாயார் தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஸ்வரி இன்று திருச்சிக்கு வந்து அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மகனின் பரோல் தொடர்பாக மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அவரையும் பரோலில் விடுவிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கோரி அவர் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தார்.

7 Tamils release kn nehru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe