சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில், கடந்த 11-ந்தேதி இரண்டு தொழிலதிபர்கள் குடும்பத்திற்கு திருணம் நடத்த தீட்சிதர்கள் அனுமதி கொடுத்தனர். இதன் பேரில் ஆயிரம் கால் மண்டபத்தின் மரபுகளை மீறும் வகையில், அந்த திருமணம் நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

இதில் நடராஜர் கோயிலுக்கென்று தனிச்சட்டம் இயற்றி தமிழக அரசின் முழு கட்டுபாட்டிற்குள் கோவிலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கியுள்ளது. மேலும் பலர் மரபுகளை மீறிய தீட்சிதர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிதம்பரம் காவல் துணைக்கண்காணிப்பாளர் கார்த்தியேன் மற்றும் சார் ஆட்சியர் விசுமகாஜன் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் 27-ந்தேதி இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் போராட்டம் செய்வதற்கு ஆயத்தம் ஆகி வருகிறார்கள்.

 Petition to inspect Chidambaram Natarajar Temple

Advertisment

இந்த நிலையில் வியக்ரபாத சிவபூஜ அன்னதான அறக்கட்டளை சார்பில் நடராஜர் கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்ற ஆடம்பர திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் டிஎஸ்பியிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கோயிலின் உள்ளே மிகவும் பாதுகாப்பாக உள்ள தங்க பொற்கூரை மீது விதிகளை மீறி இரவு முழுவதும், அதன் மீது ஏறி அலங்கரம் செய்துள்ளனர்.

இதற்கு தீட்சிதர்கள் நாங்க தூங்கிய நேரத்தில் அவர்கள் பொற்கூரை மீது ஏறிவிட்டார்கள் என்று கூறியுள்ளனர். விலை மதிபெற்ற தங்க பொற்கூரை பாதுகாப்பாக உள்ளதா? அதிலுள்ள தங்கம் முழுமையாக உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும். பொற்கூரையின் மீது சில இடங்களில் கலர் மாற்றம் உள்ளது. பொற்கூரை பாதுகாப்பில் தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலை மதிப்பற்ற தங்க பொற்கூரையை பாதுகாக்க இரவு நேரத்தில் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.