Petition in High Court seeking inclusion of mother's name in government department documents ..!

அரசுத்துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரைக் குறிப்பிடும் வகையில் தனிப் பிரிவை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள், கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதிச் சான்று, வருமான சான்று பூர்வீக சான்று பெறுவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

Advertisment

இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகாத, கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும்போது தந்தை குறித்த விவரங்கள் கோர முடியாது என்றும் நாட்டை தாய்நாடு மற்றும் மொழியைத்தாய்மொழி, நதியைப் பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்களில், விண்ணப்பங்கள் சான்றிதழ்களில் தாய் பெயரைக் குறிப்பிடும் வகையில் உரியத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.