Advertisment

தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் பதில் இல்லை; வழக்கு தொடர்ந்த அமைச்சர்..!

The petition to the Election Commission was not answered; Minister following the case

77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா தடுப்பு விதிகள் முழுமையாகப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக் கோரி தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது தனிமனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவக் குழுவைப் பணியமர்த்த வேண்டும், கிருமிநாசினி வைக்க வேண்டும், முகக் கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக் கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

case mr vijayabaskar admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe