Advertisment

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி மனு! – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

Petition to divide the guidelines for medical research! - Central and state governments ordered to respond!

Advertisment

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு, தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி, பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டாக்டர் செரியனின் மனுவில், "இந்திய மருத்துவத் துறையை உலகத்தரத்திற்கு முன்னேற்றும் வகையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால், அது தோல்வியடைந்து விடுகிறது. மேலும், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதம், வங்கிகளின் கடுமையான நடைமுறைகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாமல் போவதற்கு காரணமாகும்.

பிரதமரின் ஆலோசனைப்படி, இந்த விவகாரத்தை நிதி ஆயோக்கின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதுகுறித்து விவாதித்த நிதி ஆயோக், அரசு அமைப்புகளுக்கு பல்வேறு பரிந்துரைகள் அனுப்பியுள்ள போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட்டு, எதிர்காலத்தில் இளம் விஞ்ஞானிகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்." எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது. மேலும்,மனுவுக்கு மத்திய - மாநில அரசுகளும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் நிதி ஆயோக் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது.

highcourt Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe