Advertisment

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை எடுத்துவர மாவட்ட ஆட்சியரிடம் மனு

Petition to District Collector to take  the husband body from abroad

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகேயுள்ள நத்தமலை கிராமத்தை சார்ந்த இளையரசன்(43) குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இறந்து விட்டதாக காட்டுமன்னார்குடியில் உள்ள அவரது மனைவி அம்பிகாவுக்கு கடந்த 19ந்தேதி தகவல் கொடுத்துள்ளனர். இறந்த உடனே தகவல் கூறாமல் 5 நாட்கள் கழித்து தகவல் கொடுத்துள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவில்லை. எனவே அவரது உடலை சொந்த ஊரான காட்டுமன்னார்குடிக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனஅவரது மனைவி அம்பிகா, கடலூர்மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வனிடம் மனு அளித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அரசுக்கு தெரியடுத்தி அவரின் உடலை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். வெளிநாட்டுக்கு சென்ற கணவர் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்உள்ளிட்ட கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.

Advertisment

abroad kattuMannargudi corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe