Petition to the District Collector panchayat!

விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், முத்துகிருஷ்ணன் என்பவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Advertisment

அந்த மனுவில், முகையூர் ஊராட்சி ஒன்றியம் தங்களது ஆயந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் சேர்க்கப்படும் பயனாளிகள் பட்டியலில் அரசு ஊழியர்கள் அரசு சார்ந்த பயன் பெறும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர். பயனாளிகள் பட்டியலை கிராமசபை கூட்டத்தில் முன்வைத்து ஒப்புதல் பெற்ற பிறகு பயனாளிகளுக்கு அட்டை கொடுத்து பணியில் சேர்க்க வேண்டும். ஆனால் இந்த ஊராட்சியில் கிராம சபை ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமான முறையில் செயல்படுகிறது.

Advertisment

விவசாய பாசன கிணறு தோண்டும் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆண்டுகளில் வேலை திட்ட பணிகளில் 448 பயனாளிகள் மூலம் 7.45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அதேபோன்று தனிநபர் பண்ணைக்குட்டை வெட்டும் பணியில் 410 பேர் ஈடுபட்டு உள்ளதாகவும் இதற்கு 95 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேற்படி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் நடந்துள்ளன. இதற்கான ஆதாரங்களை புகார் மனுவுடன் இணைத்திருக்கிறோம். ஊழலுக்கு காரணமான நபர்கள் மற்றும் அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று ஆயந்தூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.