/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk22.jpg)
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்ற பிரச்சனை எழுந்த போது, மோதல் ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை நிராகரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்தது.
இந்த நிலையில், அவரது மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் எவ்வளவு அபராதம் விதித்தது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ரூபாய் 25,000 என மனுத்தாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. கூடுதலாக ரூபாய் 25,000 சேர்த்து ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Follow Us