கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜூலை 31 வரையில்பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு நிவாரணமாக மாதம் ரூபாய் 5000 நிவாரணம் வழங்கவும், அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களில் 25% கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும்வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று (07.07.2020) சென்னை, கிண்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.