/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_126.jpg)
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கிராமப் பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகம் ஒரு மனுவை வழங்கினார். பிறகு அவர் பேசும்போது, "தமிழகத்தில், 65,000 தூய்மைக்காவலர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள் தினக்கூலிகளாகப் பணி செய்கின்றனர். இவர்களுக்கு, மாதம் 2,600 ரூபாயில் இருந்து, 3,600 ரூபாயாக ஊதியத்தை உயர்த்தி, முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதனை அமல்படுத்தாமல், பழைய சம்பளத்தையே வழங்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது, உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கலாம் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 -ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டும், சென்ற மாத ஊதியத்தைக்கூட பழைய ஊதியமாகவே வழங்கியுள்ளனர். புதிய ஊதியம் வழங்குவதுடன், கடந்த ஏப்ரல் 1 முதல் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். இதுபற்றி, கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி, முறையிட்டால், இதுவரை, நிர்வாக ரீதியாக எங்களுக்கு எந்த உத்தரவும், நிதியும் வரவில்லைஎனக் கூறுகிறார்கள். அவை வந்தபின்னரே, புதிய ஊதியத்தொகை வழங்கப்படும், என்கின்றனர். இதுபற்றி கலெக்டர், அரசுடன் பேசி விரைவில் தீர்வு காண்பதுடன், நிலுவைச் சம்பளத்தையும் பெற்றுத்தர வேண்டும்.” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)