/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_72.jpg)
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு 14ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களின் மூன்று சக்கர வாகனத்தில் வந்து, கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனுக்களைக் கொடுத்தனர்.
பிறகு அவர்கள் கூறுகையில், ‘மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு, அரசு சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதே போல் சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். வீடு இருந்தும் வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4.40 சதவீதம் மேலுள்ள தண்டுவட மாற்றுத்திறனாளிகளுக்குஉதவித் தொகையாக மாதம் ரூபாய் 1,000 வழங்குவதை உயர்த்தி ரூபாய் 1,500 ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கும் 100 நாள் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு, உதவிகளைச் செய்ய வேண்டும்’ என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)