சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செல்லப் பிராணிகள் கண்காட்சி இன்று (25.03.2023) நடைபெற்றது. இந்த கண்காட்சியில் டாபர் மேன், லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர், ஸ்பிட்ஸ், பொமரேனியன் உட்பட பல வெளிநாட்டு நாய்கள் மற்றும் உள்நாட்டு நாய்களும் கலந்துகொண்டன. இந்த கண்காட்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசித்தனர்.