perverse game; 4 Admission to Children's Hospital

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் எலி பேஸ்ட்டை டூத் பேஸ்ட் என நினைத்து பல் துலக்கிய சிறார்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ளது கொட்டாரக்குப்பம் கிராமம். இந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தனது3 வயது அக்காள் மற்றும் உறவினர் வீட்டுப் பெண் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை டூத் பேஸ்ட் என நினைத்து நான்கு சிறார்களும் பல்துலக்கி உள்ளனர். உடனடியாக பெற்றோர் இதை கவனித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 4 சிறார்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எலி பேஸ்ட்டை டூத் பேஸ்ட் என நினைத்து சிறார்கள்பல் துலக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment