/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a580.jpg)
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். கூலி வேலை செய்து வைத்த அருண்குமார் மனைவி சுகன்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுகன்யா தன்னுடைய 7 வயது மகள் தனுஸ்ரீ, நான்கு வயது மகன் அகிலன் ஆகியோருடன் கிணற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த மீட்புப் படையினர் கிணற்றில் இறங்கி பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியான இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)