/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/well-res-1.jpg)
துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி தொகுதியில் வசித்துவரும் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் அதே ஊரைச் சேர்ந்த ராஜாவுக்கு சொந்தமான வயல் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தன. இது கிணற்றில் துர்நாற்றத்தை உண்டாக்கியதால் ராஜா, ஆடுகளின் உடல்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்த மகேந்திரனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று (05.12.2021) மகேந்திரன் கிணற்றில் இறங்கியபோது துர்நாற்றம் தாங்க முடியாமல் மயங்கி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர்கிணற்றுக்குள் இறங்கி மகேந்திரன் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் காவல்துறையினர் சடலத்தை உறையூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)