person who went to fill petrol passed away in a road accident

Advertisment

திருப்பத்தூர் அடுத்த ஓமகுப்பம் பகுதியைச்சேர்ந்தவர் பாப்பண்ணன் மகன் புட்டன்(70). இவர் தன்னுடைய வீட்டில் இருந்து மிட்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடசாலையின் எதிர் திசையில் சென்றுள்ளார்.

அப்போது ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷா மகன் சாருக் என்பவர் தனியாருக்குச் சொந்தமான பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், மிட்டூர் பகுதியில் அதி வேகமாக வந்து கொண்டிருந்தபோது சாலையைக் கடந்த புட்டன் மீது வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காட்சிகள் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் போடசாலையைக் கடந்த முதியவர் மீது பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.