Skip to main content

விசாரணைக்கு அழைத்துவந்த நபர் காவல்நிலையத்தில் மயக்கம்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்! 

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

The person who was brought for interrogation fainted at the police station

 

சேலம் அஸ்தம்பட்டி, அருண் நகரைச் சேர்ந்தவர் வாலிபர் கோகுல். இவர் மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு இரண்டு இருசக்கர வாகனங்கள் திருட்டு, 4 வீடுகளில் கொள்ளை அடித்தது, சேலம் கன்னங்குறிச்சியில் திருட்டு, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள் என மொத்தம் ஒன்பது வழக்குகள் உள்ளது. இவர் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். இந்நிலையில் கோகுல், குண்டூர் அருகே உள்ள அய்யனார் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதாக நவல்பட்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

அதனைத் தொடர்ந்து கோகுலை விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு காவல்துறையினர் போனில் அழைத்துள்ளனர். இதையடுத்து கோகுல் புதுகை அருகே மாத்தூர் குமாரமங்கலம் வடுகபட்டியில் பொறியாளராக உள்ள தனது அண்ணன் கார்த்திகேயனை துணைக்கு அழைத்துக்கொண்டு நவல்பட்டு காவல் நிலையத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

 

காவல் நிலையத்திற்கு வந்த கோகுல் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத நவல்பட்டு காவல்துறையினர் கார்த்திகேயன் உதவியுடன் மயக்கத்தை தெளியவைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் காவல் நிலையத்திற்கு வரும் போது அவர் விஷம் அருந்தி வந்தது தெரியவந்ததை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்