
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சின்னப்புலியூர் குண்டு செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(69). இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான இட பிரச்சனை காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்து வந்துள்ளார். மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கிருஷ்ணமூர்த்தி இடம் இருந்து பெட்ரோலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணமூர்த்தியை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.