/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/06_64.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங் போர்டு வேலன் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்காக ஆரிப்நகர் பகுதியைச் சேர்ந்த கலீம் என்பவர் சென்றுள்ளார். அவர் தனதுஇருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
பின்னர்,கலீம் திருமணம் முடிந்த பிறகு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போதுஅவர் நிறுத்தி இருந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தை காணவில்லை. உடனேதிருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளனர்.மர்ம நபர் ஒருவர் திருமணத்திற்கு வந்தது போல் நடித்து இருசக்கர வாகனத்தைத்திருடிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சி ஆதாரத்தை வைத்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கலீம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கிராமிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us