Advertisment

மருத்துவமனையில் கார் திருடிய நபர்! கைது செய்த போலீசார்!

The person who stole the car at the hospital! Police arrested

கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் உறவினர் ஒருவரின் கார் திருட்டு போனதாக புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ரேஸ் கோர்ஸ் போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தியிருந்த மாருதி 800 காரை திருடிச் சென்ற நபரை கைது செய்தனர்.

Advertisment

பிடிபட்ட நபர் திருச்சிமாவட்டம் மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன்ராஜா (எ) ஆரோக்கிய சகாய தர்மராஜ் (56 ) என்பது தெரிய வந்தது. இவரைப் பற்றி விசாரித்த போது ‘சென்னை, திருப்பூர், சிவகங்கை ,கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு இரு சக்கரவாகனம் திருடிய வழக்குகள் இவர் மேல் உள்ளது’ என்பது தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட நபரிடமிருந்து இருசக்கர வாகனங்கள், 2 ராயல் என்ஃபீல்ட் புல்லட், இரண்டு கார்கள் , 2 பேஷன் ப்ரோஆகிய வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

goverment hospital Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe