Skip to main content

பரிகாரத்திற்கு பாம்பு முன்னால் நாக்கை நீட்டிய நபர்; நாக்கிலேயே கொத்திய கண்ணாடிவிரியன்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

A person who sticks out his tongue in front of a snake for atonement; Stinging vitreous on the tongue

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 54 வயதான நபர் ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அந்நபர் ஜோதிடரை நாடியுள்ளார். ஜோதிடர், பாம்பு கனவில் வந்தால் அதற்கு தனியாக பரிகாரம் இருக்கிறதென்று கூறி பாம்பிற்கு பூஜை செய்ய சொல்லியுள்ளார். மேலும், பாம்புப்புற்று உள்ள கோவிலையும் சுட்டிக்காட்டி பூஜைகள் முடிந்த பின் பாம்பிற்கு முன் நாக்கை காட்டுங்கள் என்றும் கூறியுள்ளார்.

 

ஜோதிடர் சொன்னதைக் கேட்டு பூஜைகள் முடிந்த பின் பாம்புப்புற்று அருகே கண்ணாடிவிரியன் பாம்பிற்கு முன் நாக்கை நீட்டியுள்ளார். எதிர்பாராத விதமாக பாம்பு அந்நபரின் நாக்கில் கொத்தியது. இதனால் அந்த நபர் மயக்கமடைந்தார். அவருடன் சென்ற உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

 

ஈரோடு மணியம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தில் குமார் கூறுகையில், “நோயாளி நவம்பர் 18 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த போது அவரது வாயில் ரத்தமாக இருந்தது. அவரது நாக்கு திசுக்கள் பாம்பின் விஷத்தினால் சேதமடைந்து இருந்தது. மேலும், விஷம் பரவாமல் இருப்பதற்காகவும் நோயாளியைக் காப்பாற்றவும் நாக்கை அகற்றியுள்ளோம்.  அதற்கு பிறகும் கூட நோயாளியின் உயிரைக் காப்பாற்ற நான்கு நாட்கள் போராடினோம்” என்றார். 

 

இதற்கு முன்பு கூட பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரின் வாயில் பாம்பு கொத்தியது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் அதே போன்ற நிகழ்வு நடந்துள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.