Advertisment

கிராம ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய நபர்…!

kallakuruchi

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடியை சேர்ந்தவர் மாயவன் இவர் அந்த ஊரின் ஊராட்சி செயலாளராக பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை ஊராட்சி பணிகள் சம்பந்தமாக வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த போதை ஆசாமி மணிகண்டன் என்பவர் மாயவனிடம் அவர் பகுதியில் உள்ள மின் டேங்கில் பல நாட்களாக குடிநீர் நிரப்பவில்லை அதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாயவன் விரைவில் அதை செய்வதாக பதிலளித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத மணிகண்டன் மாயவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் மணிகண்டன், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் மாயவனின் முகம் மற்றும் மார்பில் சரமாரியாக கிழித்துள்ளார் இதனால் மாயவன் உடம்பில் ரத்தக் கோடுகளாக ரத்தம் வழிந்தது.

இதை பார்த்து பதறிப்போன மாயவன் மனைவி சரசு அவரது மகன் சஞ்சய் ஆகியோர் மணிகண்டனிடமிருந்துமாயவன் மீட்பதற்காக தடுத்துள்ளனர். அப்போது அவர்கள் மீதும் கத்தியால் கிழித்து உள்ளார் மணிகண்டன். படுகாயமடைந்த இதில் மூவருக்கும் உடம்பில் பல இடங்களில் ரத்தக் கோடுகள் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் மணிகண்டனிடம் இருந்து மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையில் சேர்த்து உள்ளனர். போதையில் மூன்று பேரின் உடம்பில் கத்தியால் கண்டபடி கோடு போட்டு ரத்தக்காயம் ஏற்படுத்திய மணிகண்டன் மீது மாயவன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்திய சம்பவம் கூத்தக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Panchayat President kallakuruchi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe