கோவையில் ஆன்லைனில் வெடிமருந்துகளுக்குத்தேவையான வேதிப்பொருட்களை வாங்கியதாககோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோவில்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் மீதானகொலைமுயற்சிக்குஇந்த வெடிபொருட்களை வாங்கியது தெரியவந்தது. இருப்பினும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவ்விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால்,முன்விரோதம் காரணமாக கொலைமுயற்சிக்காகத் தான்இந்த வெடிபொருட்கள் வாங்கப்பட்டது என்பதுஉறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்துஇவ்வழக்கு குறித்தான அடுத்தகட்ட விசாரணையை கோவை மாநகரக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோவை மாநகரக் காவல்துறைக்குஇவ்விசாரணை மாற்றப்பட்ட பின் சரவணம்பட்டியில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்திலும்கர்நாடகாவின்மங்களூர் பகுதியிலும்நடந்த சம்பவங்களின்தொடர்ச்சியாக இணையம் வழியாக வெடிமருந்துகளுக்குரிய வேதிப்பொருட்களை வாங்குபவர்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தான் மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.