/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-5_210.jpg)
சேலத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் இரும்பாலை அருகே உள்ள அய்யம்பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு,பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 12 வயதுள்ள சிறுமிகள் இருவரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, கூலித் தொழிலாளி பழனிசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து மே 29 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)