
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மனைவி நதியா(33) இன்ஸ்டாகிராமில் அடிமையாகி தினமும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார்.
நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான பிரகதீஸ்வரர் என்ற இளைஞர் அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார். இந்நிலையில் பிரகதீஸ்வரர் ஒரு வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இவரும் கணவருக்கு தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பிரகதீஸ்வரரை வரவழைத்து உள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். பிரகதீஸ்வரர் நதியாவை பார்த்து உன்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார்.
தாலி சரடு மட்டும் தங்கம் என நதியா கூறியுள்ளார். அப்போது திடீரென கழுத்தில் இருந்த தாலி சரடைபறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி பிரகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த நதியாவின் மூன்றரை பவுன் தங்கத் தாலி சரடை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)