A person who instigated his wife to commit while keeping the infants; Mischief in drinking alcohol

Advertisment

சேலம் மாவட்டம் பெருமாபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். 35 வயதான தனபாலுக்கு நெடுநாளாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கத்தின் காரணமாக தனபாலுக்கும் அவரது மனைவி நந்தினிக்கும் அடிக்கடி தகராறுஏற்பட்டுள்ளது.

தனபால் மற்றும் நந்தினி தம்பதிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு4 வயதில் மகளும் 2 வயதில் மகனும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இரு குழந்தைகளுக்கும் கோவிலில் மொட்டை அடிக்க முடிவு செய்திருந்தனர். மொட்டை அடிக்க இருந்த நாளில் காலையிலேயேதனபால் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறுசெய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நந்தினிதற்கொலை செய்து கொண்டார். நந்தினியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நந்தினியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

Advertisment

சேலம் சப் கலெக்டர் விஷ்ணுவர்த்தினி மற்றும் அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் தனபால் அவரது மனைவி நந்தினியை தற்கொலைக்குத்தூண்டியதாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.