Advertisment

விபத்தில் சிக்கித் துடிதுடித்த நபர்; ஓடி வந்து உதவிய தலைமைச் செயலாளருக்குக் குவியும் பாராட்டுகள்

tn

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நபரை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இன்று காலை நேப்பியர் பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு கால் முறிந்தது. இதனால் ரத்தம் வெளியேறி துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு விபத்தைக் கண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, காவல்துறைக்கும்108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தார்.

Advertisment

உடனடியாக அந்த நபர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய அந்த நபர் வேளச்சேரியைச் சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. பணி நிமித்தமாக பாரிஸ் கார்னர் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. அண்ணா சதுக்கம் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ காட்சிசமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் பல தரப்பிலிருந்து தலைமைச் செயலாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

incident iraianbu rescued
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe