Advertisment

புத்தாண்டு பரிசாக பாம்பினை கொடுத்த நபர்; ஊரையே பரபரப்பாக்கி உயிரிழந்த சம்பவம்

The person who gave the snake as a New Year gift; The tragedy caused a stir in the town

புத்தாண்டு பரிசாக பாம்பினை கொடுத்தவர் அந்த பாம்பால் கடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். நேற்றிரவு அப்பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதையில் கலந்து கொண்டார் மணிகண்டன்.

Advertisment

கொண்டாட்டத்தில் இருந்தபோது அப்பகுதியில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பைக் கண்டவர் அதை கையில் எடுத்து விளையாடியுள்ளார். பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதையும் மீறி பாம்பினை கையில் பிடித்து அருகில் இருந்தவர்களிடம் எல்லாம்இது உங்களுக்கு புத்தாண்டு பரிசு என காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மணிகண்டனுடன் இருந்த கபிலனையும் பாம்பு கடித்தது. தற்போது கபிலன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த பாம்பினை அடித்துக் கொன்றுவிட்டனர்.

cudalore snake
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe