Advertisment

கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்பு

jl

சிதம்பரம் அருகே தவத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் அவரது வயலுக்குச் சென்றுள்ளார்.தொடர் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலைதவறி விழுந்துள்ளார். அவரை வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் தேடியுள்ளனர்கிடைக்கவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத்தகவல் அளித்ததின் பேரில் சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுமூலம் பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது அவரதுஉடல்இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் அவரது உடலைமீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமராட்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையறிந்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Advertisment

river accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe