Advertisment

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

person who cheated more than Rs.2 crores by conducting auctions

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (50). அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த இவர், ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகத் தெரிகிறது, இதன் மூலம் இவரை நம்பி ஏராளமானோர் சீட்டுக்கட்டி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவரது வீடும் கடையும் பூட்டிய நிலையிலேயே இருப்பதைக் கண்டு அவரிடம் சீட்டுப் பணம் கட்டியவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது தற்போது இந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற தகவல் மட்டுமே வந்ததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

person who cheated more than Rs.2 crores by conducting auctions

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரையிலான பணத்துடன் தலைமறைவான மளிகை கடைக்காரரைக் கைது செய்து அவரிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி பெரியபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இதனை அடுத்து முறைப்படி புகார் அளிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 கோடியே ஐம்பது லட்ச ரூபாய் வரை ஏழு சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டுத் தலைமறைவான நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

money police
இதையும் படியுங்கள்
Subscribe