Published on 30/07/2022 | Edited on 30/07/2022

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, செம்பொன்நெறிஞ்சியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர், திருச்சுழி ஐயங்கார் பேக்கரி எதிரிலுள்ள மின் கம்பத்தை, தனது ஜீப்பை ஓட்டிச்சென்று சேதப்படுத்தியுள்ளார். அதனைச் சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர்களிடம் தங்கப்பாண்டியன் தகராறு செய்திருக்கிறார். இத்தகவலறிந்து, அங்கு வந்த போலீஸ்காரர்களிடமும் பிரச்சனை செய்திருக்கிறார். தங்கப்பாண்டியன் தங்களுடன் தகராறு செய்தது குறித்து மின்வாரிய ஊழியர்கள் புகார் அளிக்க முன்வராத நிலையில், திருச்சி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் தங்கப்பாண்டி அளித்த புகாரின் பேரில், அந்தக் காவல்நிலையத்தில் தங்கப்பாண்டியன் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.