Advertisment

துப்புரவுப் பெண் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர்! 

 person who behaved rudely to the cleaning lady

மதுரை மாநகராட்சி பூங்காவும், விளையாட்டு மைதானமும் பொன்மேனி – ஜீவனா ஸ்கூல் எதிரில் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி பெண் பணியாளர்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அவர்களைப் பொருட்படுத்தாமல், அந்த நபர் செல்போனில் பேசியபடியே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார்.

Advertisment

பெண் ஊழியர்கள் சத்தம்போட்டும், அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒருவழியாக முடித்துவிட்டு சாவகாசமாகத் திரும்பிய அவர், அந்த ஊழியர்களை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். “நான் 20 வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன். எப்பவும்போல இன்னைக்கும் போனேன். என்னைச்சத்தம் போடுற அளவுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா?” என்று உரத்த குரலில் மிரட்டினார்.

Advertisment

 person who behaved rudely to the cleaning lady

அப்போது, பெண் ஊழியர்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த நவீன் “என்ன சார்.. தப்பும் பண்ணிட்டு சத்தம் போடுறீங்க? பெண்கள் இருக்கிற பக்கம் திரும்பி ஜிப்பை மாட்டுனீங்க. இதெல்லாம் சரியில்ல.” என்று கூற, அந்த நபர் மேலும் எகிற ஆரம்பித்தார். “பூங்காவுக்கு வர்றவங்க இந்த நாற்றத்தைத் தாங்குவாங்களா? துப்புரவு வேலை பார்க்கிறவங்கன்னா.. இந்தமாதிரி ஆளுங்களுக்கு இளக்காரமா தெரியுது. கொரோனா காலத்துல உசிர மதிக்காம ரிஸ்க் எடுத்து வேலை பார்த்தோம். எங்க அருமை இவங்களுக்கு எங்கே தெரியப்போகுது?” என்று புலம்பிய முனியம்மா தலையில் அடித்துக்கொண்டார்.

அந்த நபர் யாரென்று விசாரித்தோம். ஜீவனா ஸ்கூல் வேன் டிரைவராம். சொந்தமாக நான்கு வாகனங்கள் வைத்து ட்ரிப் அடிக்கிறாராம். கல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த அந்த நபரிடம், சட்டத்தின் பார்வையில் நீங்கள் நடந்துகொண்ட விதம் குற்றச்செயல்’ என்று அழுத்தமாகச் சொன்னோம். சுத்தத்தைப் பேணவேண்டிய இடத்தில் அசுத்தம் செய்பவர்கள் திருந்த வேண்டும்.

workers driver park madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe