வீடியோவை காட்டி நான்கு ஆண்டுகளாக பலரை சீரழித்த கொடூரன் கைது..ஈரோட்டில் பரபரப்பு

ஈரோட்டில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு நான்கு ஆண்டுகளாக அவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காம கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு காந்தி நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் திண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். மாணவி கல்லூரிக்கு வெளியில் அமைந்துள்ள கடைக்குசென்று வரும்போது வில்லரசம்பட்டி யை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்றஏற்கனவே திருமணமானவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

person was arrested for sexually destroying many people for four years

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மாணவியின் பிறந்தநாளன்று ஏற்காடு செல்லலாம் என அழைத்துச் சென்ற ராதாகிருஷ்ணன் காரில் செல்லும்போது ஆபாசப்படங்களை காட்டியவாறு காரில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான.சில்மிஷத்தில் ஈடுபட்டதை மற்றொரு செல்போன் கேமராவில் படம் பிடித்துக் கொண்ட ராதாகிருஷ்ணன் அதனை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டிமாணவியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளான்.

வேறுவழியின்றி அதற்கு சம்மதித்த மாணவியை ஈரோடு பேருந்துநிலையம் முன்பு உள்ள விக்னேஸ்வரா லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதனையும் வீடியோவாக பதிவு செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக மாணவியை தொடர்ந்துசீரழித்துள்ளான்.

person was arrested for sexualy destroying many people for four years

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இடையில் முதல் முறை கர்ப்பமடைந்த மாணவிக்கு காரில் வைத்து போலியாக தாலி கட்டி மனைவி என்று கூறி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறை கர்ப்பம் ஆன பொழுது கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைத்துள்ளான்.மாணவியின் செல்போனில் உள்ள அவரது தோழிகளின் எண்ணைசேகரித்து அவர்களில் பலருக்கும் இதே போன்று பாலியல் இச்சைக்கு மிரட்டியுள்ளான் உட்படுத்தியுள்ளான்.

இந்த கொடுமைகள் குறித்து வெளியில் சொல்ல முடியாத அந்த மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரிடம் இது குறித்து கேட்டபோது தனது பெற்றோரிடம் நடந்த உண்மையை மாணவிகூற அவரது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

person was arrested for sexually destroying many people for four years

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவனைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வசதியான குடும்ப பின்னணியை கொண்ட ராதாகிருஷ்ணன் வேலை வெட்டிக்கும் செல்லாமல் கல்லூரி முன் உள்ள நண்பனின் கடையில் அமர்ந்து கொண்டு ஏராளமானவர்களை பேசி மயக்கி இதேபோல் 100க்கும் மேற்பட்ட பெண்களைகொடுமைக்கு ஆளாக்கி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அண்மையில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை அடுத்து பெரம்பலூரிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகளும், செய்திகளும்வெளியானது. இந்நிலையில் ஈரோட்டில் அதே போன்று பாலியல் வன்கொடுமை நிகழ்வு கொடூரம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Erode police Rape Sexual Abuse
இதையும் படியுங்கள்
Subscribe