/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2801.jpg)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ஏராளமான நாடுகளிலிருந்து விமானங்கள் சேவை செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பெட்டியில் உள்ள பீடிங் பகுதியில் தங்கத்தை மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உருளை வடிவிலான அந்தத் தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் அது 250.500 கிராம் தங்கம் என கணக்கிட்டனர். அதன் மதிப்பு சுமார் 12 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)