/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4964.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள புது மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சோலையப்பன்(38). இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சோலையப்பன், உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள அஜீஸ் நகர் பகுதி காப்புக் காட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். இவரது சூளையில் 10க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று காலை செங்கல் சூளை ஒட்டி அமைந்துள்ள மோட்டார் கொட்டகை பகுதியில் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் சோலையப்பன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து செங்கல் சூளைத் தொழிலாளர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கோபாலன், சப் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். தலையில் மட்டும் வெட்டுக் காயம் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் சோலையப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோலையப்பன் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சோலையப்பன் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்த முழு உண்மை தெரியவரும் என்று கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)