/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3491.jpg)
திருச்சி மத்திய சிறையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தண்டனைக் கைதி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள நம்பிவயல் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ம.சுரேந்திரன் (35). இவர் திருவோணம் காவல் நிலையத்தில்போக்சோ வழக்கில் கைதாகிப்பின்னர் அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் 11 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)