The person involved in the criminal case passes away

Advertisment

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார்(45), தென்னுதார் மேம்பாலம் அருகில் உள்ள வணிக நிறுவனங்கள் அடங்கிய அடுக்கு மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தில்லைநகர் போலீசார் நடத்திய விசாரணையில் அவரின் ஆடையில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே அவர் கஞ்சா மயக்கத்தில் கீழே விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மீது பொன்மலை, அரியமங்கலம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.