விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 17ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், பல்வேறு கருத்தரங்குகளுக்கு அக்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் நடைபெற்றகருத்தரங்கு ஒன்றில் இன்று (19.08.2021) திருமாவளவன் பங்கேற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டத்திற்கு கத்தியுடன் ஒரு நபர் வந்ததால், போலீசார் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரித்ததில் அந்த நபரின் பெயர் மாரீஸ்வரன் என தெரிவந்துள்ளது. தொடர்ந்து, கத்தியுடன் கருத்தரங்கிற்கு வந்தது குறித்து மாரீஸ்வரனிடம்போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.