Advertisment

கோவில் குளத்தில் மூழ்கிய நபர்; சோகத்தை ஏற்படுத்திய மனைவியின் செயல்

A person drowned in a temple pool; The action of the wife that caused the tragedy

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவில் குளத்தில் குளிக்க சென்ற நபர் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் நபர் ஒருவர் குளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்த அவர் மூழ்கி போனார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வந்தது தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தேடி உடலை கண்டுபிடித்தனர்.

Advertisment

உயிரிழந்த நபரின்மனைவிக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த அந்த நபரின் மனைவி கண்ணீர் விட்டு அழுததோடு சிபிஆர் சிகிச்சை அளிப்பதுபோல அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். எப்படியும் கணவரைகாப்பாற்றிவிடலாம்என அனைவர் முன்னும் அப்பெண்கதறி அழுதபடி அவருடைய மார்பு பகுதியை அழுத்தி சிபிஆர் சிகிச்சை கொடுத்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

pool temple
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe